பதினெட்டாம் பெருக்கு என்று எங்கள் ஊரில் சொல்வோம்.
ஆடி மாதம் பதினெட்டாம் நாள் பெருகி வரும் ( இப்போது அருகி வரும் ) ஆற்று வெள்ளத்தினை வரவேற்கும் பண்டிகை.
வழக்கம்போல இந்தப்பண்டிகைக்கும் எந்த குறைச்சலுமில்லை.
சிறுவயதில்....
அய்யோ... ஆரம்பிச்சுட்டாண்டா...என புலம்பாதீர்கள். என்ன செய்வது? புண்பட்ட மனதை ப்ளாக் எழுதியும் ஆற்றலாம்.
காட்சி -1
------------
ஆடிப்பெருக்கிற்கு ஒரு வாரகாலம் முன்பாகவே என்ன என்ன தின்பண்டங்கள் செய்யவேண்டும் என விண்ணப்பம் தருவோம். அரிசி வெல்லம், அவல் வெல்லம், பொட்டுக்கடலை உருண்டை, நிலக்கடலை உருண்டை, பொரி வெல்லம் என இந்தப்பண்டிகைக்கென்று தனி பட்டியல் உண்டு. இதில் நிச்சயம் மூன்றாவது தேறும் ஒவ்வொரு வருடமும்.
ஊர் பெருசுகள் சிலபேர் கலந்து பேசி எத்தனை மணிக்கு ஆற்றுக்கு செல்லலாம் என முடிவெடுத்து அனைவரிடமும் சொல்வார்கள். ஆயிப்பேட்டைதான் ஊர் பெயர். அதிலும் பழைய ஆயிப்பேட்டை, புது ஆயிப்பேட்டை என இரு பகுதிகள் உண்டு. நாங்கள் இருப்பது புதுஆயிப்பேட்டை. இரண்டு தெருக்கள். மொத்தம் ஒரு இருபது குடும்பங்களே தேறும். எல்லாருமே பங்காளிகளும், மாமன் மச்சான்களுமே..
சாயங்காலமாக ஒரு நான்கு மணி அளவில் அனைவரும் தின்பண்டங்கள், படையல் பொருட்களுடன் வெள்ளாற்றுக்குச்செல்வோம்.
இந்தப்பண்டிகைக்கென்று ப்ரத்தியேகமான சில படையல் பொருள் உண்டு. அதில் முக்கியமானது காதோலை கருகமணி. பனை ஓலையை சிறு குழல் போல செய்து, வண்ணம் தீட்டி அதை ஒரு கருப்பு சிறிய வளையலில் சொருகி வைத்திருப்பார்கள்.பிறகு மஞ்சள் பொடி, குங்குமம், வெற்றிலை பாக்கு, தேங்காய், எலுமிச்சை பழம் என வேறு சில சங்கதிகளும் உண்டு.
இந்தப்படையல் பொருட்களை எடுத்துக்கொண்டு வீட்டு மக்கள் வருவதற்கு முன்பாக எங்களைப்போல இளவட்டங்கள் சிலபேர் முன்பே ஆற்றுக்கு சென்றுவிடுவோம்.
ஆற்றில் தண்ணீருக்கு அருகில் இருக்கும் ஈர மணலில் மணலை குவித்து கிட்டத்தட்ட பிரமிடு போல ஒரு கோவில் கட்டுவோம். அதற்கு எதிராக சிறிது தூரத்தில் இன்னொரு சிறிய கோவிலும் உண்டு.கோவிலுக்கு படிகளும், சுற்றி சுற்றி உருண்டைப்பிள்ளையார்களும் உண்டு.
எல்லோரும் வந்தவுடன் ஒரு கோவில்களுக்கும் இடையில் இரு புறமுமாக கொண்டு வந்த படையல் பொருட்களை வைப்போம். எல்லோருடைய தட்டிலிருக்கும் காதோலை கருகமணி, எலுமிச்சை, மஞ்சள், குங்கும பொடிகளை எடுத்து ஒவ்வொரு பிள்ளையார் தலையிலும் ஒரு கருகமணி, அதன்மேல் ஒரு எலுமிச்சை வைத்து பொடிகளை கொட்டி அலங்காரம் செய்வோம்.
பிறகு வழக்கம்போல் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி சடங்குகளை முடித்தவுடன், இறுதியாக அனைவரும் மணல் பிள்ளையார்களையும், கோவிலையும் இரு கைகளில் அள்ளிச்சென்று ஆற்றில் கரைப்போம். கரைத்துவிட்டவுடன் படையல் முடிந்தது. பிறகு ஆற்றில் கும்மாளம் போட்டுவிட்டு குளித்துக்கரையேறுவோம்.

இதே இடம்தான் நாங்கள் கோவில் கட்டி கொண்டாடிய இடம்.
காட்சி -2
------------
நேற்று காலை எதேச்சையாகத்தான் தெரிந்தது ஆடிப்பெருக்கு என்று. தெரிந்து விட்டதால் வடை பாயசம் சாப்பிட்டு விட்டு வேலையை முடித்துவிட்டோம்.

ஆடி பெருக்கு, நான் கொண்டதில்லை.. இருந்தும், ரசிப்பேன்
ReplyDelete